காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82
(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) 50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம் 24-25 51. மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம் 97-98 52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139 53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டுஇனிது…