‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை
(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி) பட்டுக்கோட்டை பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் முதல் தொகுதியை நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான். 1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன் பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்….