நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்காலச் சிற்பங்கள்!
உதகமண்டலத்தில் கிடைத்த பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள் செய்தியாளர்கள் என்பவர்கள் தம்முன் நடப்பதைப் பதிவு செய்பவர்கள் என்றுமட்டும்தான் பலருக்கும் தெரியும் ஆனால் சில செய்தியாளர்கள் அதையும்தாண்டித் தங்கள் மண்ணின் வளமையையும் மக்களின் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் உதகமண்டலத்தில் உள்ள செய்தியாளர் பிரதீபனும் ஒளிப்படக்கலைஞர் இரகுவும் குறிப்பிடத்தகுந்தவர்கள். நீலகிரி மாவட்டதின் பல்வேறு சிறப்புகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துச்,செய்தியாகவும் படமாகவும் வெளியிட்டு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போதைய அவர்களது பதிவுதான் பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள். இதுகுறித்து, தொட்டபாலி…
செஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி
(ஆவணி 22, 2045 / செப்.07, 2014 இதழின் தொடர்ச்சி) 13. சியான் நகரத்துச் சுடுமண் வீரர்கள் சியான் நகரின் முதன்மைக் கடைகளிலும், உணவகங்களிலும் வாயிலில் ஒரு சுடுமண்படிம(terracotta or Terra-cotta) வீரர் நிற்பதை நாம் இன்றைக்கும் காண முடியும். சியான் நகருக்குப் பெருமை சேர்க்கும் ஓர் இன்றியமையாத இடம் சுடுமண்படிம வீரர்கள் அமைந்துள்ள பகுதிதான். ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, இவ்விடத்தை 8ஆம் உலக விந்தை என அறிவித்துள்ளது என்பதால், உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் அங்கு வருகிறார்கள். அப்படி என்ன விந்தைம் இங்கு இருக்கிறதென்று கேட்கிறீர்களா?…