மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்! – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை “உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைத்துள்ள அறிக்கைப்படி மாநில அரசு சாராயத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்காவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை ஏற்படுத்தும்” எனத் தமிழக அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.   குமுக(சமூக) நீதிக்கான அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் கே.பாலு. அவர், சாராயம் தொடர்பான உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்ள, உலக நலவாழ்வு அமைப்பு (WHO) செய்துள்ள பரிந்துரைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரித்…