இசை நாட்டியத்துடன் திருக்குறள் கற்பிப்பு
பள்ளி மாணவர்களுக்கு நடனமாடி இசையோடு திருக்குறளைக் கற்றுக் கொடுப்போம்! நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லிக் கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயிற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது. பயிற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேசுவரி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை-அறிவியல் கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கிப் பேசுகையில், என் அன்னை தொடக்கப்பள்ளி…