ஆரியக் கூத்தாடுகிறார் சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி!- பழ. கருப்பையா

வேத நாகரிகம் அணிந்து வருகின்ற முகமூடிதானே இந்து நாகரிகம்     “திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; “திராவிடன்” என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.” ”ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், ‘இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு” என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று…

‘பாரதஇரத்தினா’வை இழிவுபடுத்தும் சுப்பிரமணியசாமி: தா.பாண்டியன் கண்டனம்

  இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரியிருப்பது, ‘பாரதஇரத்தினா’ விருதை இழிவுபடுத்தும் செயல் என்று தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “பாசகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் எனக் கோரியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காகப் போர் விதி மீறல்களை மீறிய…