செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்
‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும் தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா, “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும் படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது. தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை அவையோர் இருந்து களித்து மகிழ்ந்தமை…