கலைச்சொல் தெளிவோம் -17 : சுரியலும் செதுவும்–Curl and Shrink
17 சுரியலும் செதுவும்–Curl and Shrink சுரியல்(௫): சுரியலம் சென்னிப் பூஞ்செய் கண்ணி (பதிற்றுப்பத்து ௨௭.௪) அரியல் வான்குழல் சுரியல் தங்க (புறநானூறு ௩௦௭.௬) இவற்றுள் சுரியல் என முடிச் சுருள் குறிக்கப் பெறுகின்றது. இலைச்சுருளைக் குறிக்க leaf curl – இலைச் சுருக்கு (வேளா.) என்கின்றனர். சுருக்கு என்று சொல்வதைவிடச் சுரியல் என்பது மிகப் பொருத்தமாக அமைகிறது. இலைச்சுரியல் – leaf curl shrink என்பதும் சுருக்கு (வேளா., பொறி., மனை., கால்.) என்றே சொல்லப்படுகின்றது. கூர்மை, ஒளி முதலியன மழுங்குவதும் …