ஓமானில் பாரதி விழா
ஓமானில் பாரதி விழா கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்! என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்! கடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது! எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,…
சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு , மசுகட்டு
சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி‘ எனும் கட்டுரைகள், மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குநர் திருவாளர் இரவி தமிழ்வாணன் உதவியுடன் அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் வெளியீட்டு விழா, ஓமான் தலைநகர் மசுகட்டில் சீரோடும் சிறப்போடும் கடந்த கார்த்திகை 04, 2018 : 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. ஓமனுக்கான இந்தியத்தூதர் மேதகு இந்திரமணி பாண்டே நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி…
சுரேசமீ எழுதிய ‘வள்ளுவமாலை-100’ நூல் அறிமுகக் கூட்டம்
தமிழ் ஆர்வலர் சுரேசமீ எழுதிய ‘வள்ளுவமாலை-100’ நூல் அறிமுகக் கூட்டம் மசுகட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைகாசி 24, 2046, சூன் 07, 2015 அன்றுநடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடனும் சிறப்பு வழிபாட்டுடனும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக மசுகட்டுத் தமிழ்ச்சங்க மேனாள் தலைவரும், இன்றைய நெறியாளருமான. சானகிராமன், மசுகட்டுத் தமிழ்ச் சங்கத் தலைவர் அபு ஃகசன், பொருளாளர் திருவாட்டி .விசயலட்சுமி, இலக்கிய அணிச் செயலாளர் திருவாட்டி விசாலம், திருக்குறள் தென்றல். தங்கமணி, சுவாமிநாதன், சந்திரசேகர், கலைமணி, இலக்கியா முதலான பலர் கலந்து…
மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தின் பூவையர் பூங்கா நிகழ்ச்சி – சுரேசமீ
மசுகட்டுத் தமிழ்ச் சங்கம் மகளிர் மட்டுமே கலந்துகொண்ட ‘பூவையர் பூங்கா’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியை மசுகட்டு வாடிக்கபீரிலுள்ள, கிறிசுடல் சூட்டு உறைவகத்தில் சித்திரை 22, 2046 / மே 5, 2015 அன்று நடத்தியது. இந் நிகழ்ச்சியில், வெள்ளித்திரை- சின்னத்திரை நடிகை நளினி, மகளிர் புற்றுநோய் மருத்துவர் மரு. சுமனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்! ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் கூடியிருந்த பெண்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது! அழகிப் போட்டியில் தொடங்கிய நிகழ்ச்சி, சொல் விளையாட்டு,…