(அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 053. சுற்றம் தழால்   உறவினர்க்கு வேண்டியன கொடுத்து, அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு.   பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல்,        சுற்றத்தார் கண்ணே, உள.        ஏழ்மையிலும் பழைய உறவைக்        கொண்டாடல், உறவாரிடமே உண்டு.   விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா      ஆக்கம் பலவும், தரும்.        விருப்பம் குறையா உறவாரால்        அறுபடா வளநலம் அமையும்.   அள(வு)அளா(வு)…