தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்
தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு உழவர்கள் மாறிவருகிறார்கள். தேனிப் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்கள் பெரும்பாலும் சோளம்,கம்பு, மணிலா போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த சில வருடங்களாக உரிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டன. அதனால் உழவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடுவது பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது. தண்ணீர்த்தட்டுப்பாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் உள்ள சூழ்நிலையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உழவர்கள் தங்கள் விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக மாற்றிவிட்டனர்….