தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 340 – 341
(தமிழ்ச்சொல்லாக்கம்: 333 – 339 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 340-341 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 340. சுவாமி வேதாசலம் – மறைமலை அடிகள் (1916) பொதுநிலைக் கழக மாளிகை அழகிய பூங்காவினாற் சூழப்பெற்றிருந்தது. உள்ளமும் உடலும் நலமுறக் காலையினும் மாலையினும் அடிகளார் தம் அருமருந்தன்ன மகளுடன் உலாவி வருவார். தம் மகளையுந் தம்மைப்போலவே இன்னிசையிலே பயிற்றுவித் திருந்தனர் அடிகள். 1916இல் ஒருநாள் மாலை இராமலிங்க அடிகள் பாடிய, “பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந்த தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்…