இனப்படுகொலையாளி சகத்து தயாசுக்கு (Jagath Dias) சுவிசில் அரசப் பிடியாணை (Warrant)! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதன்மைக் காரணர்களில் ஒருவரான படைத்துறைப்பணித் தலைவர் சகத்து தயாசுக்கு(Major General Jagath Dias) எதிராக ௨௦௧௧ (2011) ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நேரடியாக தயாசு மீது தொடுக்கப்படவில்லை. மாறாக, இனப்படுகொலையாளி சகத்து தயாசை இலங்கைத் தூதராகப் பணியமர்த்திய யேர்மனிய அரசு மீதே மனித உரிமை மீறல்கள் குறித்துக் குற்றம் சுமத்தப்பட்டு இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக சகத்து…