தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 11. சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்!  (முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! தொடர்ச்சி) தமிழ்நாட்டிலுள்ள உணவகங்களில் தமிழைத் தேடும் நிலைதான் உள்ளது. இதனை முன்பே, “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!” என்னும் தலைப்பில் இரு கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும் இப்பொதுத் தலைப்பில் அதனையும் குறிப்பிட வேண்டும் என்பதற்காகக் குறிப்பிடுகிறோம். முன்பெல்லாம் பெரும்பாலான உணவகங்களின் பெயர்களைக் ‘கிளப்’ எனக் குறிப்பிட்டனர். பாவேந்தர் பாரதிதாசன் தமிழியக்கத்தில், “உணவுதரு விடுதிதனைக் ‘கிளப்’பெனவேண்டும் போலும்!” எனக் கேட்டிருப்பார். ‘கிளப்’ என்பது குறைந்திருந்தாலும்…