ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.
ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார். தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் மொழித் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்…
தமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – பரிதிமாற்கலைஞர்
தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல…