தமிழ்ப் புலவர்கள் வடசொற்கலப்பைத் தடுத்தனர் – பரிதிமாற்கலைஞர்

பௌத்தர் தலையெடுத்த பொழுது தமிழ்ப் புலவர்கள் வடசொற்களைத் தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர்.   பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கடினமாய் விட்டது. ஆதலின்…

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை! – பரிதிமாற்கலைஞர்

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.   இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சற்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.   அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும்…

இல்லறத்தில் இனிது வாழ்க ! – பரிதிமாற்கலைஞர்

இல்லறத்தில் இனிது வாழ்க ஆடலு மழகும் பாடலுஞ் சான்றீர் இன்னிசைக் குயில்கள்! பன்னருங் கலைவலீர் நும்வகைப் பட்டோர் நுமைத்தெய்வ மென்பர் நுந்தமக் கோர்சொல் சிந்தை செய்ம்மினோ வாய்ப்பாரு நலனெலாம் வாய்க்கப் பெற்றீர் என்கொ லவற்றைப் புல்லிடை யுகுக்கின்றீர் தூய இல்லறக் கோயி லில்லை கொல்? இன்னற மணியெனு மியற்கை நலத்தீர் வீழ்ந்த மகளிர்காள் விரைவினி லெழுமின் ஆழ்ந்திடா தின்னே யறிவுகைப் பற்றுமின் இழிந்தார் புகழுரை யேற்றுக் கொள்ளலிர் இன்புடன் மேவி யில்லறத் தினிது வாழிய எங்கை மீரே – பரிதிமாற்கலைஞர்: தனிப்பாசுரத் தொகை

தமிழிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழர்க்கு முன்னரே அறிந்தவர் போல் காட்டிக் கொண்டனர்

  தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். – வி.கோ. சூரிய நாராயண சாத்திரி என்னும் பரிதிமால் கலைஞர்: தமிழ் மொழியின் வரலாறு: பக்கம் – 27

வியத்தகு மில்லறம் – பரிதிமாற்கலைஞர்

வியத்தகு மில்லறம் விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம் ஒழுக்க வியலறி வறுத்துஞ் சாலையாய் நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே ரன்பு காய்த்துநல் லருள்கனிந் தலகிலா இன்பநறை பிலிற்று மினியகற் பகமாப் இலகிடு முண்மை மலையிலக் கன்றே ஏத்துறுந் தகைய இல்லற மெனுமிம் மாத்துடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ் செலுத்தபு துன்பந் தீயரை யெறிந்து தொலைத்திட லறியார் துறவு துறவென நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து மயக்கினு மாழ்கலீல் மாந்தர்கள்! உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினோ, – – பரிதிமாற்கலைஞர்…