உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்- 54 : எழுத்தாணிப் பாட்டு சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும் போது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. கலியாணமானபின் சவுளிக் கடைக்காரர்களும் மளிகைக் கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக் கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வர வர அதிகமாயிற்று. இதனால் மிக்க…
உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு-தொடர்ச்சி) என் சரித்திரம்இராமசாமி பிள்ளை அப்போது மதுரை இராமசாமி பிள்ளை என்ற தமிழ் வித்துவானொருவர்அங்கே இருந்தார். அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர். ஆறுமுகநாவலரிடம் பழகியவர். தாம் இயற்றிய சில நூல்களைப் பிள்ளையவர்களிடம்படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களைக் கேட்டு வந்தார். அவரைப் பற்றிநான் சில முறை கேள்வியுற்றிருந்தேன். பிள்ளையவர்கள் அங்கிருந்தவர்களில்ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் செய்வித்தார். ஆசிரியர் விருப்பம் என் உடம்பில் மெலிவைக் கண்ட ஆசிரியர் என் தந்தையாரைப்பார்த்து, “இவருக்கு இன்னும் நல்ல சௌக்கியமுண்டாகவில்லை….
உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்-தொடர்ச்சி) என் சரித்திரம் அம்மை வடு நான் பல்லக்கில் சூரிய மூலையை அடைந்தபோது பகல் 11 மணி இருக்கும் அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது. எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி விழுந்தவன் போலானேன். நான் அங்கே…
உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி) என் சரித்திரம் விடை பெறுதல் 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணியதேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியேசென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாகும். நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆனபகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர்…