தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை அறுவடைக்குத்தயாரான நெற்பயிர்கள் சேதம்  தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, மஞ்சளாறு அணைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது.   இப்பகுதியில் முதல்நாள் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டமுடியாதநிலை இருந்தது. அதன்பின்னர் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. இதனால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் சாய்ந்தன. சில பகுதிகளில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.   இந்நிலையில் செயமங்கலம், மேல்மங்கலம்,…