மொழியுரிமை சூளுரை ஏற்பு
முதல் மொழிப்போர் ஈகி நடராசனார் நினைவு நாளில் மொழியுரிமை சூளுரை ஏற்பு; மொழியுரிமை ஆண்டு இயக்கம் தொடக்கம் சென்னை, சனவரி 15, 2015: தமிழ்நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில், இன்று 1939 இல் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்று சிறையிலேயே மறைந்த ஈகி நடராசனாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்திலுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவகத்தில் கூட்டியகத்தின் பிரதிநிதிகள் இன்று காலை 11 மணிக்கு திரண்டு மொழிப்போர் ஈகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். …