திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 055. செங்கோன்மை

(அதிகாரம் 054. பொச்சாவாமை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 055. செங்கோன்மை   மக்களது நலன்களைக் கருதியே, முறையோடு நடைபெறும் நல்ஆட்சி    ஓர்ந்து,கண் ணோடா(து), இறைபுரிந்து, யார்மாட்டும்,       தேர்ந்து,செய்வ(து), அஃதே முறை.   ஆராய்ந்த, இரக்கம் காட்டாத நடுநிலைத் தண்டனயே முறைஆம்.   வான்நோக்கி, வாழும் உல(கு)எல்லாம்; மன்னவன்       கோல்நோக்கி, வாழும் குடி.   உலகம் இன்மழையால் வாழும்; மக்கள், நல்ஆட்சியால் வாழ்வார்.   அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய்       நின்றது, மன்னவன் கோல்,  …

வள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்

   – –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013   இதழ்த் தொடர்ச்சி)  அ. செங்கோன்மை  நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு  இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும்…