இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு
( (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை-தொடர்ச்சி) தமிழர் வீரம் செங்கோன் தரைச் செலவு செங்கோன் படையெடுப்புசெங்கோன் என்பவன் பழங்காலத் தமிழரசருள் ஒருவன். அவன் ஆண்ட நாடு பெருவளநாடு. அந்நாட்டில் மணிமலையும், பேராறும், முத்தூரும் இருந்தன என்பர். அம் மன்னவன் அயல் நாட்டின்மீது படையெடுத்தான்; போர் புரிந்தான்; வெற்றி பெற்றான். அப்போரைப் பாடினார் சேந்தன் என்ற செந்தமிழ்க் கவிஞர். “செங்கோன் தரைச் செலவு” என்பது அப்பாட்டின் பெயர். யாத்திரை என்ற வடசொல்லைப் போலவே செலவு என்ற தமிழ்ச் சொல்லும் படையெடுப்பைக்…