இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4 தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார். நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…
இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க! – பூங்கொடிபராங்குசம்
இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க! இலக்கியம் கூறும் இயல்புடை வாழ்வைப் பலப்பலக் கூறாய்ப் பகுத்துக் காட்டிச் சங்கத் தமிழைச் சாறாய்ப் பிழிந்த சிங்க மறவர்; சிறந்தநல் மொழியர் இலக்குவன் என்னும் பண்புடைப் பெரியர் கலக்கமில் நெஞ்சர் கண்ணிமை துஞ்சா உழைப்பில் நாளும் உயர்ந்த நிலையால் அழைத்தது காலம் அவர்நூற் றாண்டைப் போற்றி மகிழப் புதுப்பொலி வானது ஆற்றிய பணிக்கே அகமுக நெகிழ நன்றி யென்பதை நாடி யவர்க்கே இன்று சொல்லியே இறும்பூ தெய்தது. கற்றோ ரெல்லாம் களிப்புறு வாழ்த்தால் பொற்றா மரையெனப் போற்றினர்…
செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை
செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும். சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார். அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும்….
இலக்குவனார் புகழ்நிலைக்கும்! – கவிஞர் கா. முருகையன்
பேராசிரியர் இலக்குவனார்! இலக்குவனார் எனும்பெயரைச் சொல்லும் போதே இனஉணர்வும் மொழிஉணர்வும் எழுமே நெஞ்சில்! தலைமுறையில் தமிழுக்கும் தமிழ ருக்கும் தம்வாழ்நாள் முழுமைக்கும் தொண்டு செய்தார்! சிலரைப்போல் ஒருபோதும் தமிழைச் சொல்லி சில்லறைகள் இவர்சேர்த்த தில்லை! ஆனால் மலையெனவே எதிர்ப்புகளுக் கஞ்சி டாமல் மாத்தமிழைக் காத்திடவே சிறைக்கும் சென்றார்! மொழிப்போரில் களம்கண்டோர் தம்மில் அந்நாள் முன்வரிசைப் படையினிலே இவரி ருந்தார்! “அழித்தொழிக்க வந்தஇந்தி தமிழின் மீது ஆதிக்கம் செலுத்திடுமா தமிழர் நாட்டில்? விழித்தெழுவீர் மாணவர்காள்!”- என்றே சொல்லி வேங்கையென முழக்கமிட்ட மறவர்! மானம் இழப்பதற்கோ? காப்பதற்கோ?…