செந்தமிழ் இனமே! – தமிழநம்பி செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! முந்து தமிழும் முதனா கரிகமும் இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும் துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும் நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல் கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும் மிகையுங் கொளாது குறையுங் கொடாது தகைமிகு வணிகம் தரைகட லோடி நுண்கலை வானியல் நுட்ப அறிவியல் எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும் செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே! அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி! திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!…