தமிழ் வளர்கிறது! 16-18 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன் – தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 16-18 ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில் கலப்ப தாலே அறிவுயரும் மொழிவளரும் நாட்டிற் கென்றும் தீங்கிலேயே என மொழிவார்; தமிழில் எங்கும் செஞ்சொற்கள் இலையென்றும் கூறி நிற்பார். தேங்கியுள்ள சாக்கடையின் தண்ணி ராலே தேனாற்றில் பெருக்கெடுத்த தென்பார் போலே பாங்கிலுள்ள வடமொழியும் சொற்கள் தந்து பழந்தமிழை வளர்த்ததுவே சான்றா மென்பார் ! (16) கற்கண்டைக் கடியாமல் விழுங்கிப் பல்லைக் காப்பாற்ற வேண்டுமென்றும், அதனைப் போலே கற்கண்டைக் கல்க்கண்டென் றெழுதி னாற்றான் கடுந்தமிழைப் புரிந்துகொள்ள முடியு…
தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 13-15 செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே சிறுகதைகள் புதுக்கவிதை வசனப் பாட்டு விந்தையுற எழுதுகிறோம் என்று சொல்லி விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்றாம் ! அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம் அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச் செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற சிறுவணிகர் கூட்டந்தான் மற்றென் றாகும்! (13) இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும் எதிரியென ஒரியக்கம் இருக்கக்…
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! உரைக்கும் மொழியும் உண்ணும் உணவும் “மக்களிடையே சமநிலைக் கொள்கையைப் பரப்பும் செயலில்தான் இப்பொழுது கருத்து செலுத்துதல் வேண்டும். இந்தியைத் தடுத்தலோ தமிழைப் புகுத்தலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்”; என்று சிலர் கருதுகின்றனர். ஒரு நாட்டின் வாழ்வியல் முறையும் பொருளியல் கொள்கையும் அவ்வப்போது தோன்றும் தலைவர்களுக்கு ஏற்ப மாறி அமையலாம். இன்று தனி உடைமைக் கொள்கையைப் பின்பற்றும் நாடு நாளை, பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றலாம். இன்று முடியாட்சியில் உள்ள நாடு நாளை, குடியாட்சியை…
சமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர் – கதிர் மகாதேவன்
சமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர் முப்பால் (திருக்குறள்) தோன்றுவதற்கு முன்னால் இருந்த கவிஞர்கள் உள்ளதை உணர்ந்தவாறு கவிதை புனைந்த வித்தகர்கள். ஆனால் இன்பத்தில் எளியரான சிலர் மருதத் திணையைப் பாடினர். சிலர் அதனை இழிவெனக் கூறி மன்னனைக் கடிந்தாரலர். கள் உண்டனர்; அதனைப் பாடவும் செய்தனர். அது தவறு என்று எண்ணினாரலர். புலால் உண்டனர்; அது இயல்பெனப் பாடு பொருளாயிற்று. இந்தச் சூழலில் தமிழர் சிக்கிச் சீரழிந்த நிலையில் தோன்றியவர்தாம் பெருநாவலர் வள்ளுவர். தாம் வாழ்ந்த சமுதாயத்தையும் தமக்கு முன்னால் நிலவிய…
செம்மை வாய்ந்த செந்தமிழ் – கிரிசா மணாளன்
செம்மை வாய்ந்த செந்தமிழ் எனது! வடமொழி யடைத்த மாமறைக் கதவினைத் திடமுடன் திறந்த தேன்மொழி எனது! மும்மையை யுணர்த்தி முப்பொருள் காட்டும் செம்மை வாய்ந்த செந்தமிழ் எனது! பொல்லாப் பிள்ளையி னருளினால் நம்பிமுன் தில்லையிற் கண்ட திருமொழி எனது! ஆறுசேர் சடையா னவைமுனம் அணிபெற நீறுசேர் சேரர் நிகழ்த்திய தீந்தமிழ்! தத்துவம் யாவும் தமிழ்மொழி யுணர்த்தலால் சத்தியஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே! கிரிசா மணாளன் திருச்சிராப்பள்ளி girijamanaalanhumour@gmail.com
திருவள்ளுவப் பெயர்க்காரணம்: மு.இராகவையங்கார்
திருவள்ளுவப் பெயர்க்காரணம்: திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக…
செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்!
தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம் பெ. சிவசுப்பிரமணியன் ஆட்சி அலுவலர் (ஓய்வு) தலைவர் 25/47, இரண்டாவது தெரு, செரியன் நகர், புதுவண்ணையம்பதி, சென்னை – 81. 044 – 2591 0102 செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்! பேரன்புடையீர், வணக்கம். உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தாய்மொழியைப் போற்றுகின்றன. ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆசுதிரேலியா என ஆறு கண்டங்களிலும் அவரவர் தாய்மொழியே கோலோச்சுகின்றன. எந்த நாட்டிலும் அயல் மொழி மோகம் காணப்படவில்லை!…