பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது

  புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர்   பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.

சென்னைக் கம்பன் கழகத்தில் ‘கலம்பகம்’ உரை

     சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார்   இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.   பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.  (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)   செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்