11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது. நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு தொடுத்த பொழுதே இவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாமே! மற்றொன்று தமிழகத் தலைவிதியை…
ம.பொ.சி. பிறந்தநாள் கருத்தரங்கு – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை
ஆனி 07, 2047 / சூன் 21, 2016 சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 111 ஆம்ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா? தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே முறையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே! தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 348(2) இன்படி, …
உயர்நீதி மன்றத்தின் பெயர் சென்னை அல்ல… தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை அல்ல … தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன் . சென்னை மாகாணம், மதராசு என்னும் பெயரில் வழங்கப்பட்ட பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1862 இல் இது மதராசு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களால், 1968 சூலை 18 இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்பொழுதே உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘தமிழ்நாடு உயர்நீதி மன்றம்’ என மாற்றப்பட்டிருக்க…
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழிஆக்கிடு! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்மாற்றம் செய்திடு! வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுக! உயர்நீதிமன்றத்தில் உள்ள நடுவண் படையைத் திரும்பப் பெறு! சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் தை 21, 2047 / பிப்.04, 2016 வியாழன் மாலை 3 30 மணி அளவில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உரிமையை நிலைநாட்ட தமிழர்களே திரண்டு வாரீர்! அழைக்கிறது தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தமிழ்த் தேச மக்கள் கட்சி தமிழ்மகன்…