தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது!
(தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! நவம்பர் புரட்சி நாள் வாழ்த்து! சென்ற ஆண்டு இதே நவம்பர் புரட்சி நாளில்தான் தாழி மடல் எழுதத் தொடங்கினேன். இன்றும் அதே ஊக்கத்துடன் எழுத விரும்புகிறேன். உடல்நிலைதான் நலிந்துள்ளது. பெரிதாக ஒன்றுமில்லை. கண்வலிதான், ஆனால் காலையில் வந்து மாலையில் போவதாக இல்லை. மூன்று நாளாக வதைக்கிறது. இந்தக் கண்வலிக்கு ‘சென்னைக் கண் (மெட்ராசு-ஐ)’ என்ற பெயர் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரை வைத்து நடந்த ஒரு கூத்தை…