பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! – இலக்குவனார் திருவள்ளுவன்
பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும் மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம். ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம், நாட்டை ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம். ஆனால்,…