செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும் வேண்டுகோளும்! செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனம் முழுப்பொறுப்பிலான இயக்குநர் இன்றியே செயல்படுகிறது. தமிழாய்ந்த தமிழறிஞரை இயக்குநராக அமர்த்தாமையால் மத்திய அரசு அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பில் இயங்கிக் கொண்டுள்ளது. (செயல்படும் தலைவர் இல்லாதபொழுது நிறுவனத்தின் நிலை இவ்வாறுதான் இருக்கும்.) அவ்வாறு கூடுதல் பொறுப்பில் வருபவர்கள் தமிழார்வலர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. எனினும் இப்போது திருச்சிராப்பள்ளித் தேசியத்தொழில் நுட்பக்கழகத்தின் பதிவாளர் திரு.அ.பழனிவேல், இயக்குநர் (கூடுதல் பொறுப்பாக) அமர்த்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறார். பணிப்பொறுப்பேற்றதும் இயக்குநர் (கூ.பொ.), நிறுவனத்திற்குச் செய்யவேண்டுவன, தமிழுக்குச் செய்ய…
செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்! முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி, மேனாள் முதல்வர், தங்கள் தலைவி செயலலிதா வழியில் செயல்படுவதாகக் கூறுகிறார். ஆனால், மாறுபட வேண்டிய நேர்வுகளில் மாறுபட்டுச் செயல்படுகிறார். காட்சிக்கு எளிமை, பிற கட்சிகளுடனான அணுகுமுறைகளில் மாற்றம், எனப் பலவற்றைக் கூறலாம். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்து தன் தனித்தன்மையை நிலைநாட்டிவருவது பாராட்டிற்குரியது. தமிழக முதல்வர் பதவி வழி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத் தலைவராவார். மேனாள் முதல்வர்கள் தங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வழியில் செல்வதைத் தன்மான…
செவ்வியல் இலக்கியம் – தேசியக்கருத்தரங்கம், ஈரோடு
மார்கழி 9,10,1-2045