சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு – இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி தாலின் பேசியதற்கும் அம்மாநாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றதற்கும் கண்டனம் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அறியாப் பிள்ளைகள் தெரியாமல் பேசுகின்றனர் என்றும் கட்சிக் கண்ணோட்டத்தில் பழி தூற்றுகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். நீதிபதிகள் சிலரும் இந்த எண்ணத்தை எதிரொலிக்கலாம் என்றும் ஐயம் வந்தது. அதை உண்மை என்று மெய்ப்பிக்கும் வண்ணம் மாண்பமை நீதிபதி செயச்சந்திரன் கருத்து…