செயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்
செயமங்கலம் பகுதியில் தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அருகே கயிறு தொழிற்சாலை, கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன. கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன் கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தொலைபேசி வழித் …
செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்! – வைகை அனீசு
செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் கண்மாய் கரை உடைந்து குளத்திற்குச் செல்லும் தண்ணீர் வீணாகிறது. செயமங்கலம் அருகே உள்ள கண்மாய்க்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்பொழுது பெய்த கனமழையால் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களுக்குச் சென்றது. வயல்களில் ஏற்கெனவே நெல்களை நடுவதற்கு உழவர்கள் நெற்பயிரைப் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரை உடைந்ததால் நெற்பயிர்களுக்குள் தண்ணீர் உள்ளே சென்று அனைத்தும் வீணாயின. அதே போல கண்மாயில் மீன்குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனால் குளத்திலிருந்து…
செயமங்கலம் பகுதியில் தலைவிரித்தாடும் கந்து வட்டிக்கொடுமை
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கந்துவட்டிக்கொடுமையால் பல குடும்பத்தினர் ஊரை விட்டு இரவோடு இரவாகக் காலிசெய்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் முதன்மைத் தொழிலாக விளங்குவது வெற்றிலைக் கொடிக்காலும், வாழைப் பயிரிடலும்தான். இப்பகுதியில் உள்ள உழவர்கள் வெற்றிலைகளைப் பயிரிட்டுத் தமிழகம் முழுமையும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 வருடங்களாகப் போதியமழையின்மையால் உழவர்களால் உழவைத் தொடரமுடியவில்லை. ஒரு சில உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி உழவைக் காப்பாற்றி வந்தனர். இருப்பினும் தாங்கள் வாங்கிய கடனுக்காக முதலைத் தராமல்…
நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் நேர்ச்சிகள்
நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் தொடரும் துயரநேர்ச்சிகள் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் வண்டிமோதல்கள் தொடர்கின்றன. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாக வைகை அணை, ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம். மேலும் கன ஊர்திகள் பெரியகுளம் வழியாகத் தேனி சென்றால் 10 அயிரைக்கல்(கி.மீ.) தொலைவு கூடுதலாக இருக்கும். இதனால் பயணநேரம், எரிபொருள் செலவு, ஊர்திப் போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனால் தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாகப் பல கன ஊர்திகள் செல்கின்றன. மேலும் ஆண்டிபட்டி, சின்னமனூர், தேவாரம் பகுதிகளில் காற்றாலை மூலம்…