வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது…