செயற்கை இலைகளால் வாழையிலை விலை வீழ்ச்சி
தேவதானப்பட்டி பகுதியில் செயற்கை இலைகளால் வாழையிலைகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, பரசுராமபுரம், கெங்குவார்பட்டி போன்ற பல பகுதிகளில் வாழை பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் பலவகையான வாழைக்காய்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. தற்பொழுது செயற்கையாக ஞெகிழியில் பல்வகை வடிவமைப்புகளில் வாழை இலைகள் வந்துவிட்டன. இதனால் இயற்கையாக உள்ள வாழை இலைகள் வணிகம் மந்தமாகிவிட்டது. மேலும் செயற்கை வாழை இலைகள் கவர்ச்சியுடனும், தூய்மையாகவும் காணப்படுவதால் பெரும்பாலான…