செயல் அலுவலரின் ஊழலாட்டங்கள்!
திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் தங்கையன். இவர் ஒத்துழைப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், 18 அகவைக்கும் குறைவான இரியாசு என்ற வேட்பாளர் 11 ஆவது தொகுதிக்காகத் தேர்தலில் நின்றுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற இசட் 719. கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் மனைவியின் உடன்பிறப்பு சியாவுதீன் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். தற்பொழுது துணைத்தலைவராக இருக்கும் சுல்தான் மதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்பொழுது தோல்வியடைந்த வேட்பாளர்கள், 18 அகவைக்கும்…
காமாட்சியம்மன் கோவிலில் மின்திருட்டு
தேவதானப்பட்டி அருள்மிகு காமாட்சியம்மன்கோவிலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் திருட்டு! செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க இறையன்பர்கள் வலியுறுத்தல் தேவதானப்பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதற்குத் தனியாகச் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோவிலில் தற்பொழுது திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் மின்அலங்காரம், கோயிலைச்சுற்றியுள்ள கடைகளுக்கு மின்சாரம் கொக்கி மூலம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் கொக்கி போட்டுதிருடப்படுகிறது. மேலும் இவ்வாறு திருடப்படும் மின்சாரத்தில் இருந்து…