தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’   “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்    ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு    ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ    டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே” என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.   ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான செய்திகளைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறும் விதத்தில் இக்கலை…