பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு
பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கும் துயரங்களுக்கும் காரணமான ஒருவனைத் துணிவுடன் செருப்பால் அடித்துள்ளார் பிரபாகரன் என்னும் இளைஞர். பிரபாகரன் என்னும் பெயர் செய்த மாயம்போலும் இத்துணிவு அவருக்கு வந்துள்ளது. இதுகேட்ட உலகத்தமிழர்கள் உவகை கொள்கின்றனர். ஆனால், செருப்படி பெற்ற நாராயணன் தண்டிக்கப்பட வேண்டிய ஆள்தான் என்றாலும் செருப்பால் அடித்தது தவறுதான் என்கின்றனர் ஒரு சாரார். செருப்படிகொடுத்தது தவறுதான்! பிராமணர் தெருவில் ஒடுக்கப்பட்டடவர் செல்லக்கூடாது என்ற தீண்டாமைக்கு எதிராகச் செயல்பட்ட, மகப்பேற்றிற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட பெண்ணைப்…