தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் !    பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!

நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க!     தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.   எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ : தமிழ்த்தேசியக்கருத்தரங்கு, செருமனி

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ யேர்மனியில் தமிழ்த் தேசியக் கருத்தரங்கு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. ‘ வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40ஆவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்பு பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் விடுதலைத் தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிலையான தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி

சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி  – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து,  தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு  : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52  

செருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016

  செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும் ‘உலகப் பெண்கள் திருநாள்’ – 2016 விழா   வரும் மாசி 29, 2047 /  மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது . தமிழ்ப்பெண்கள் அமைப்பு தரவு:

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை

செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்!   “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.   விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…

உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

      அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும்…