சிறந்த வாழ்க்கை வாழுங்கள் ! – செல்வக்குமார் சங்கரநாராயணன்
சிறந்த வாழ்க்கை வாழுங்கள் ! சிறந்த வாழ்க்கை – சொல்லும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது. நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் பட்டு ழகரத்தைச் சொல்லும்பொழுது அப்பப்பா அந்த தமிழ்ச் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்களும் ஒரு முறை “சிறந்த வாழ்க்கை“ என்று சொல்லித்தான் பாருங்களேன், தற்காலிக இன்பத்தைத் தமிழால் துய்த்து மகிழலாம். அதெல்லாம் சரிதான் அதென்ன சிறந்த வாழ்க்கை? அப்பொழுது சிறப்பில்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதா? என்று நீங்கள் தற்சமயம் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விட்டிருப்பீர்கள். சரி,…