உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா
அன்புடையீர், உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள். தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science) நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: சித்திரை…
“தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” : பேராசிரியர் சு. பசுபதி
ஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016 உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார். இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன். அரிய நுணுக்கமான…
மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்
மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார். அதன் தலைப்பு: கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் 316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ஆசிரியர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள். இவர் முன்னர் வேதிவினையியல் அறிவியலறிஞராக இருந்தவர். இவர் ”Structural Bioinformatics Inc” என்னும் நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராக…
2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்
2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன் இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயல் அமைப்பின் செய்தி: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் அருவினையாளர்(சாதனையாளர்) விருது (இயல் விருது) இம்முறை ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சியக் கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17 ஆவது இயல் விருது ஆகும். அறிவு என்பதே உலகளாவிய…
பேராசிரியர் பழ. கண்ணப்பன் மறைவு
பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்; வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில் கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர். பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி…