இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 29 சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன….