மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல்
ஈகியருக்கு நினைவேந்தலும் மொழி உரிமை ஆண்டாக 2015 ஐ கடைப்பிடித்தலும் மொழி உரிமைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலும் வணக்கம், தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் ஈகியர் நாளான சனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசின்…
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட 50 ஆண்டு கடைப்பிடிப்பு: சென்னைக் கலந்தாய்வு – விவரங்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2015 ஞாயிறு அன்று ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளன. மக்கள் இணையம் மற்றும் பன்மொழி இந்தியாவுக்கான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதன்மை அமைப்புகளும் மொழி…