ஆசிரிய வகையினர் – மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
ஆசிரிய வகையினர் நாடிய விரிநூல் சொற்றிடு திறனால் நன் நூலா சிரியன்; நகுபாசுர முதல் உரை செய்தலினால் நவில் உரை யாசிரியன்; நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய் நிலையாற் போத காசிரியன்; இவை நிகழ்தொறும் நிகழ்தொறும் ஆடிய ஞானத் திறன் உறலான் ஞானா சிரியன் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை): சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – சப்பாணிப் பருவம், 9.