சேக்கிழார் விழா, 24 ஆம் ஆண்டு, சென்னை
ஆடி 21-23, 2047 – ஆகத்து 5,6,&7, 2016 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை 600 004 044 – 2466 1426 ; 99419 07477
சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு
சேக்கிழார் விழாவில் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு தேவகோட்டை – தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் முற்றோதுதல் நிகழ்வில் அனைத்துப்பாடல்களையும் பாடிய பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்திரி, கார்த்திகேயன், இரஞ்சித்து, தனலெட்சுமி, பார்கவிஇலலிதா, கண்ணதாசன், இயோகேசுவரன், தனம், இராசலெட்சுமி, சௌமியா ஆகியோருக்குத் தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் சிவநெறிச் செல்வர் பேரா.சொக்கலிங்கம், பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள். மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரியை…