‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன்           புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது.                    செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்                    தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை   சேனாவரையர் உரை திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழவேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக்…

சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் – டி.வி.சதாசிவம்(பண்டாரத்தார்

சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் சேனாவரையர் வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். இவ்விரு பெரிய மொழிகளும் இருவேறு தனிமொழிகள் என்பதை மறந்து வடநூல் முடிவுகளையும் கொள்கைகளையும் தமிழுக்குரிய இலக்கணங்களில் புகுத்தி அவற்றிற்கு அமைதி கூறுவர். -ஆராய்ச்சி அறிஞர் டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்: தமிழ் இலக்கிய வரலாறு: பக்கம். 36