தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – 07.01.24

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – இணைய அரங்கம் மார்கழி 23, 2053 / 07.01.2024 காலை 10.00 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 1031) தமிழே விழி!                                                                      தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் கலைமாமணி முனைவர் சேயோன் முனைவர் இரா.பிரபா, உதவிப் பேராசிரியர்,…

திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல – சேயோன்

திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல     தெய்வப்புலவர் தெளிவுறுத்தும் நெறிகள் பல. அவையனைத்தும் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய மலர்ச்சிக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் உறுதுணை புரிவன. திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையும், குறள்நெறிகளையும் ஆய்ந்தும் தோய்ந்தும் தொகுத்தும் பகுத்தும் தந்துள்ளார். அவற்றை உய்த்துணர்ந்து போற்றி நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து நானிலத்தில் மேனிலை அடைவது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். முனைவர் சேயோன்: திருவள்ளுவர் காட்டும் நெறிகள்: ஒழுக்க நெறி: பக்கம் 95