சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104) நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக்…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன்பகுதி 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 6, 2045 / திசம்பர் 21,2014 தொடர்ச்சி) மனத்திலமர்ந்த மாங்கனி நாட்டிய நங்கை மாங்கனியைச் சேரன் அவையில் நுழைவதைக் கூறி அறிமுகப்படுத்துகிறார். அப்பொழுது அனைவர் சிந்தையிலும் அவளே நிறைந்துள்ளாள் என்பதை, மின்வெட்டுக் கண்கட்ட மேவி னாற்போல் மென்பட்டுப் பூங்குழலி பூமி தொட்டுப் பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்; புத்தியெல்லாம் அவளானார் அவையி ருந்தோர்! (மாங்கனி : 2. சேரன் அவையில் .. 4: 1-4) என விளக்குகிறார். பெண்கள் தங்கள் பார்வையால் ஆண்களைத் தாக்கி வீழ்த்துவதால் அவர்களின் கூரிய விழிகளை வேல்விழி…
அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு
அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு அரசியலில் பங்கேற்க யாவருக்கும் உரிமையுண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதுபோல் திரைத்துறையினருக்கும் அந்த உரிமையுண்டு. என்றாலும் நாட்டு மக்களுக்கு எத்தொண்டும் ஆற்றாமல், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் குரல் கொடுக்காமல், அவர்களின் போராட்டக்களங்களில் தோள் கொடுக்காமல், நன்கறிநிலை(popularity) உள்ளதால் மட்டுமே அரசியல் தலைமையையும் நாட்டுத்தலைமையையும் எதிர்பார்த்து அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது வீண் கனவே!. அப்படி எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக எடுத்துப் போடாதவர்களை அரிசியலில் இறங்கவும் முதல்வர் பதவியை அணி செய்யவும் சிலர் அழைக்கின்றார்கள்…
மாமூலனார் பாடல்கள் – 8 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) எ “தோழி! அவர் பெரும் பேரன்பினர்.” – தோழி. “பொருளில்லார் இவ்வுலகில் எவ்வித பயனும் அடைய முடியாது. ஆதலின் பொருள் தேடிவருகின்றேன்” என்று கூறிவிட்டுத் தலைவன் சென்றான். அவன் சென்று சில நாட்களே யாயினும், பல மாதங்கள் கழிந்து விட்டனபோல் தலைவிக்குத் தோன்றுகின்றது. தலைவி, தலைவன் பிரிவாற்றாது வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறுகின்றாள். தலைவி: தலைவர் சென்றுள்ள இடம் மிகக்கொடியது அல்லவா? தோழி: ஆம் மிகக் கொடியதுதான். பகலை உண்டு பண்ணுகின்ற ஞாயிறு இல்லையேல்,…