அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை – சேலம் செயலட்சுமி

அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை என்பதைச் சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன.   சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு துறைச் செய்திகள் பிறநாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. தாவர இயல், விலங்கியல், நிலங்களின் பிரிவுகள், இசை நுணுக்கங்கள், ஆடற் கலைகள், முத்து, வைரம், வைடூரியம் பற்றிய உண்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை, கணிதம், வானநிலை சாத்திரம், கடற்பயணங்கள் ஆகிய எந்தக் கலையிலும் அறிவியல் துறையிலும் தமிழர் பின்தங்கியதாகத் தெரியவில்லை. சங்க நூல்களைத் தெளிவாக ஆராய்ந்தால் இப்படிப் பல உண்மைகள் வெளிவருகின்றன. – இசைப்பேரரசி முனைவர் சேலம் செயலட்சுமி: தமிழிசை…

சங்கத்தில் மிகுதியான பெண்பாற்புலவர்கள் இருந்தனர் – சேலம் செயலட்சுமி

  சங்கத்தில் மிகப்பல பெண்பாற்புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது மிக்க வியப்பிற்குரியது. இவர்கள் பல்வேறு குலத்தொழில் உடையவர்களாகவும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களாகவும் இருப்பது அதனிலும் அதிசயத்திற்குரியது. அக்காலத்தில் தொழிலையொட்டியே சமுதாயம் வகுக்கப்பட்டிருந்தது. என்றும், பிற்காலத்தில் சாதி வேறுபாடுகள் தோன்றின என்றும் தோன்றுகிறது. இயற் புலவர்கள் இசைப்புலவர்கள், நடனப் பெண்கள் ஆகியோர் அரசு குடும்பத்திலும் இருந்தனர். எளிய தொழிலாளிகள் இல்லத்திலும் தோன்றினர். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்புக்கொண்டு என்ற சங்க காலப் பெண்புலவர் பாண்டியனின் அரசமாதேவி; ஆதிமந்தி என்பாள் சோழ மன்னனின் திருமகள்; நடனத்தில் வல்லவளாக அவள்…

தமிழிசையே பிற இசைகளுக்குப் பிறப்பிடம்

  தமிழிசையே பிற இசைகளுக்கெல்லாம் பிறப்பிடம். தமிழிசையிலிருந்துதான் பிறமொழி இசைகள் கிளைகளாகப் பிரிந்து சென்றன. தமிழிசைப் பண்களே பிற்காலத்தில் பெயர்மாற்றங்களும் இடமாற்றங்களும் பெற்று வடமொழிப் பெயர்களைப் பெற்றுவிளங்கின என்பதற்கெல்லாம் தக்க ஆதாரங்கள் இங்கு (சிலப்பதிகார வேனிற்காதையில்) நமக்குக் கிடைக்கின்றன. – இசைப் பேரறிஞர் முனைவர் சேலம் செயலட்சுமி : சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள் பக்கம். 322