பெரியாரியல் பயிற்சி வகுப்பு, பாலமலை,சேலம் மாவட்டம்.

பெரியாரியல் பயிற்சி வகுப்பு இடம் : பாலமலை, காவலாண்டியூர், சேலம் மாவட்டம்.  நாள் :17.05.2016 – 18.05.2016. (இரண்டு நாள்) நிகழ்வுத் திட்டங்கள் :  17.05.2016. செவ்வாய்க்கிழமை காலை : 8.30. – காலைச் சிற்றுணவு. 10.00 – தோழர்கள் அறிமுகம். 11.00 -”அறிவியல் மன்பதை உருவாக்கத்தை நோக்கி”.- மருத்துவர் எழிலன். மதியம் 1.00 – உணவு இடைவேளை. 2:30 – ”இட ஒதுக்கீடு -சந்திக்கும் அறைகூவல்கள்” – தோழர் கொளத்தூர் மணி. 3:30 – தேநீர் இடைவெளி. 4:00 – ”பெரியாரியல் காலத்தின்…

வழக்குரைஞர் கிராந்தி சைதன்யாவிற்குப் பாராட்டுவிழா, சேலம்

  பொய் வழக்குகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரச் சிறைகளில் வாடிய தமிழர்களின் விடுதலைக்குப் போராடிய குடியுரிமைக் குழு(ஆந்திரப்பிரதேசம்) வின் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா அவர்களுக்குப் பாராட்டு விழா சேலம் நான்கு சாலையிலுள்ள சாமுண்டி வணிக வளாக இலக்குமி அரங்கில் எதிர்வரும் மாசி 27, 2047 / 10 -03- 2016 வியாழக்கிழமை காலை 10 : 30 மணிக்கு நடைபெற உள்ளது. தோழர் வேடியப்பன் தமிழகப் பழங்குடி மக்கள் இயக்கம்

மக்கள் கலைஇலக்கிய விழா, ஏர்வாடி, சேலம்

  நடிப்பு : கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம் – பயிலரங்கு நாள் :  மார்கழி 02, 2047 /  02-01-2016– காலை மணி -9-00 இடம் -குட்டப்பட்டி -சேலம் -மாவட்டம் முனைவர் -மு .ராமசாமி முனைவர்- சே.இரவீந்திரன் இரவிச்சந்திரன் அரவிந்தன் அசுவகோசு வெளிரங்கராசன் தவசி சுப்ரு வாத்தியார் வடிவேல் வாத்தியார் முன் பதிவு செய்து கொள்க . தொடர்புக்கு மு. அரிகிருட்டிணன் 09894605371   [பெரிதாகக் காணப் படத்தின்மேல் அழுத்தவும்]

சொல் காக்க! – மதன். சு, சேலம்

கூரிய வாளைவிட கூரிய  சொல் வலிமை! கூடுமட்டும்  சொல் காக்க கூடுமுந்தன் வாழ்வில் நலம் ! வாளினாலிவ் உடலில் துன்பம் சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் ! வரம்புடைய  சொல்லால் வாழ்வினிலே சேரும் இன்பம் ! ஒரு  சொல் உரைத்திடினும் உயர்வு எனின் உலகை ஆளும் ! தவறான  சொல்  லெனின் தரமிழந்து தரணி மாளும் ! ஆதலினால்  சொல்லினை அளந்து நீங்கள் பேசிடுவீர் ! காதலினால் பேசுதற்போல் கண்ட  சொல் விட்டிடாதீர் ! மதன். சு   சேலம் ecemadhan94@gmail.com

சிறுதானிய உணவுத்திருவிழா, சேலம்

ஆடி 10. 2046 முதல் ஆடி 24, 2046 வரை   சூலை 29, 2015 முதல் ஆக.09, 2015 வரை சேலம் அத்தம்பட்டிச் சுழற்சங்கம், சேலம் ஐந்திணை உணவகம் கண்காட்சி கருத்தரங்கம்

செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்:  செயலலிதா  தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி  இராமதாசு பேச்சு தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில்  மரு. அன்புமணிஇராமதாசு போட்டியிடுகிறார். இதனையொட்டி தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய சனநாயக் கூட்டணிச் செயல்வீரர்கள்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி இராமதாசு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தத் தேசியசனநாயகக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் தலைமையாளருக்கான…

ஈழத்திற்கு எப்போது நீதி கிடைக்கும்? வைகோ வேதனை!

 சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து வைகோ பேசியது வருமாறு: தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் காவிரியில் தடுப்பணைகள் கட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, முயற்சித்து வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் சுடப்படுகின்றனர், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெகு அருகில் ஏழரைக் கோடி உறவுகள் இருந்தபோதும், ஈழத்தில் கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்ற…