பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? – மறைமலை இலக்குவனார், தினத்தந்தி
பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? 2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது. பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு படி மேலாகப் பெற்ற மகனாலே கொலை செய்யப்படும் கொடூரம், பணம் கேட்டு மிரட்டும் பேரனால் சாவு, காவல்துறைக் கெடுபிடியால் சித்திரவதை, அலுவலகத்தில் அவமானம், சக ஊழியரால் துன்பம் என்று எண்ணற்ற சோதனைகள் பெண்களை நிம்மதியாக…