மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி : தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு   திருச்சிராப்பள்ளி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம்சார்பில்மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தன. இதில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதினர். இப்போட்டிகளில்பங்கேற்றுத் தேர்வு எழுதியதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நான்குபிரிவுகளில் பரிசுகள் வழங்குகின்றனர்.  இப்போட்டிகளில் தமிழகம்முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.  சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் தேவகோட்டைபெருந்தலைவர்மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளிதான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 5.00 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாணவர்களைப் பேருந்துமூலம் திருச்சிக்கு ஆசிரியர்  அழைத்துச் சென்றார்.  இவ்வாய்ப்பு அரசு உதவி பெறும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குகிடைத்தநற்பேறுஆகும்.   இப்பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கணிதத்திறன் போட்டிக்கான தேர்விற்கு மாணவ மாணவியரை ஆயத்தப் படுத்தினார்.   கண்ணதாசன், ஆகசுகுமார், சீவா, யோகேசுவரன், தனலெட்சுமி, பார்கவி இலலிதா, தனம், கார்த்திகா ஆகிய மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன்திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச்சென்று தேர்வில் பங்குபெறச் செய்து அழைத்து வந்தனர்.  மாணவமாணவிகள்மிகுந்த ஆர்வமுடன் தேர்வு எழுதியதாகத் தெரிவித்தனர்.

தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை

செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்!   “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.   விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…